28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl4265
சிற்றுண்டி வகைகள்

சம்பா கோதுமை பணியாரம்

என்னென்ன தேவை?

சம்பா ரவை – 1/2 கப்,
கருப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
வெங்காயம் – 1,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும். மாவில் மிளகாய் தூள் சேர்க்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.sl4265

Related posts

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்

nathan

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

nathan

பலாப்பழ தோசை

nathan

சமோசா செய்வது எப்படி

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

nathan

புழுங்கல் அரிசி முறுக்கு

nathan

பார்லி பொங்கல்

nathan

ராஜ்மா சாவல்

nathan