27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
malgova mango 002
ஆரோக்கிய உணவு

மல்கோவா மாம்பழத்தின் நன்மைகள்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பார்த்ததுமே பலருக்கும் எச்சி ஊறும்.
அந்த மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன, அதில் ஒன்றான மல்கோவா மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

மல்கோவா மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

100 கிராம் மாம்பழச்சதையில்- நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம்.

கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 16 மிலி கிராம், தயாமின் 0.008 மிகி, ரிபோபிளேவின் 0.09 மிகி, நியாசின் 0.09மிகி, கால்சியம் 14 மிகி, பாஸ்பரஸ் 16 மிகி, இரும்பு 1.30 மிகி என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

1) மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2) தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3) மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

4) பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

5) மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.

6) மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

7) கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.

8) மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.malgova mango 002

Related posts

சமைக்கும் போது உப்பை கையில் எடுத்து போட்டால் பணம் கொட்டுமாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் டோனட்ஸ் தயாரிப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு எந்த வயதில் இறைச்சியை கொடுக்கலாம்

nathan

நீரிழிவு உள்ளவர்கள் கரட், பீற்றுட் உண்ணலாமா? – Dr.சி.சிவன்சுதன்

nathan

வீட்டிலேயே இதுபோன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு பிரட் தயாரிக்கலாம்.

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்!!!

nathan

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

nathan

சுவையான ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

nathan

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

nathan