37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
201605130853396424 Men do not want Torture women SECVPF
மருத்துவ குறிப்பு

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்
இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.

சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.

எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.

புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.201605130853396424 Men do not want Torture women SECVPF

Related posts

சித்தர்களின் ஹைக்கூ… சித்தரத்தை!

nathan

வாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் ஓர் புதிய வழி! படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

சர்க்கரையை நோயை குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்

nathan

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

nathan

சூப்பர் டிப்ஸ் கொழுப்பு எனர்ஜியாக மாறனுமா? அப்ப இத படிங்க!

nathan

பாரிசவாத நோயினை எவ்வாறு இனங்கான முடியும்?

nathan