உடல் எடை குறைய உதவும் கொள்ளு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கொள்ளு சுண்டல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
கொள்ளு – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி,
உப்பு – தேவைக்கேற்ப,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க.
செய்முறை :
* கொள்ளுவை நன்றாக கழுவி முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து கொள்ளவும்.
* மிக்சியில் தேங்காய்த் துருவலுடன் மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
* வேக வைத்த கொள்ளு அரைத்த தேங்காய் மற்றும் உப்பும் சேர்த்துக் நன்கு கிளறி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
* சத்தான கொள்ளு சுண்டல் ரெடி.
* டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது இந்த கொள்ளு சுண்டல்.