31.5 C
Chennai
Saturday, Jul 12, 2025
201605131258075334 How much water should you drink each day according to body SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் தண்ணீர் வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்..

45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.201605131258075334 How much water should you drink each day according to body SECVPF

Related posts

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

nathan

உயரமான பெண்கள் தவிர்க்கும் ரொமான்ஸ் விஷயங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த ஆறு பயிற்சியை வீட்டில் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.

nathan

பணம் மூட்டை மூட்டையா கொட்ட ஆமை மோதிரத்தை போடுங்க….

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

பெண்களின் ராசிப்படி அவர்களின் அடிப்படை குணம் என்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

அடிக்கடி மலம் கழித்தல் மருத்துவம்

nathan

புற்றுநோய் வராமல் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களை கடைப்பிடிங்க!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan