Other News

நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

தெலுங்கு நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் ஐதராபாத்தில் வியாழக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாகார்ஜுனா.

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் 2021 இல் பிரிந்து செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அப்போது நடிகை சோபிதா துலிபாலை நாக சைதன்யா காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘வானதி’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக காதலித்து வந்த நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் X தள பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “இன்று, எனது மகன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், அவரை எங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துவோம், அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Related posts

காதலித்து ஏமாற்றியதாக போஸ்டர் ஒட்டிய பெண்…

nathan

வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்..!

nathan

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

nathan

சனியின் சேர்க்கையால் பல பிரச்சினைகளை எதிர் நோக்கவுள்ள ராசிகள்

nathan

ஹிந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான லியோ..

nathan

zodiac-signs-in-tamil: இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப ஆபத்தான காதலர்களாம்…

nathan

பிராவுடன் அங்க அழகு அப்பட்டமாக தெரிய ஆட்டம் போடும் அனிகா சுரேந்திரன் !!

nathan

போட்டோஷூட்டில் கலக்கும் லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா

nathan

ஆண்களுக்கு இந்த ராசியில் பிறந்த பெண்களைதான் பிடிக்குமா?இங்கு பார்ப்போம்

nathan