28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201605071411592474 how to make Masala Papad Stuffed Roll SECVPF1
சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

அப்பளத்தில் செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மசாலா அப்பளம் – 10,
உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,
துருவிய பன்னீர் – 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.

* அத்துடன் உப்பு, துருவிய பன்னீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

* ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.

* உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

* சுவையான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.201605071411592474 how to make Masala Papad Stuffed Roll SECVPF

Related posts

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ்

nathan

மசால் தோசை

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை

nathan

சூப்பரான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan