201605090832320182 inclusion of women health to everyday foods SECVPF
ஆரோக்கிய உணவு

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்

பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்
பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம.

பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம். மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. விட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் விட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கீரைகளில் எண்ணற்ற விட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.

தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.201605090832320182 inclusion of women health to everyday foods SECVPF

Related posts

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்

nathan

கவணம் உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

nathan

கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கிச்சன் கிளினிக் – உணவே விருந்து உணவே மருந்து

nathan

உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றுபுண்ணை குணமாக்கும் அத்திக்காய்.. பொரியல் செய்வது எப்படி?

nathan

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்…?

nathan

உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்

nathan