26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

கொழுப்பை கரைக்கும் கேரட்! சருமத்தையும் பளபளப்பாக்கும்

1412315730கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்

*சக்தி 41 கலோரிகள் *கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம் *சர்க்கரை 5 கிராம் *நார்சத்து 3 கிராம் *கொழுப்புச் சத்து 0.2 கிராம் *புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

* தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.

* கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

* பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

* வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.

* பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

* வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

* இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.

* சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.

Related posts

இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி சரி பண்ணலாம்?

nathan

நெருஞ்சில் பொடி – nerunjil powder benefits in tamil

nathan

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

nathan

உடலுக்கு நிலக்கடலை பாலினால் ஏற்படும் நன்மைகள்..

nathan

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan

sakkaravalli kilangu benefits in tamil – சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள்!!

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை

nathan

குறைந்தது 50 வயது வரை உயிருடன் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள்!!!

nathan