தேவையான பொருட்கள் :
பன்னீர் – 300
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 1 1/2 டீஸ்பூன்
ஊறவைக்க :
இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
எழுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க :
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 1 அ 2
சில்லி கார்லிக் சாஸ் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :
* பன்னீரை சமமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பன்னீர், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், எழுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். அடுத்து பிரிட்ஜில் இருந்து எடுத்து 2 மணிநேரம் வெளியில் வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் கலவையில் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) மாவை தூவி பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* அடுத்து அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வைக்கவும்.
* மற்றொரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சி, பூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள், ப.மிளகாய் போட்டு நன்றாக வறுக்கவும்.
* அடுத்து அதில் சில்லி கார்லிக் சாஸ், தேவையான உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின் 20 ml தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* பின்னர் அதில் பன்னீரை போட்டு மசாலா பன்னீரில் நன்றாக ஒட்டுமாறு பிரட்டவும்.
* பன்னீர் மொறுமொறுப்பாக வரும் வரை ஃபிரை செய்ய வேண்டும்.
* பன்னீர் மொறுமொறுப்பாக வந்தவுடன் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.
* சுவையான ஸ்பைசி பன்னீர் 65 ரெடி.
குறிப்பு :
* மசாலா அதிகம் விரும்பாதவர்கள் மசாலா அளவை குறைத்து கொள்ளலாம்.