24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
AApT40o
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே 40 வயதை கடந்துவிட்டீர்களா!

பெண்களின் உடல், பிறப்பு முதல் எண்ணற்ற பருவங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. பருவமடைதல், குழந்தைப்பேறு என ஒவ்வொரு நிலையிலும் உடல் அளவிலும் மனதளவிலும் பெண்கள் பல மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இந்தத் தருணங்களில், நிறையக் கேள்விகளும் பல குழப்பங்களும் சந்தேகங்களும் வந்து செல்லும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தை, சிரமப்பட்டே பெண்கள் கடந்து செல்கிறார்கள். தன் உடல் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, இந்தப் பருவத்தை அமைதியாகவும் பயமின்றியும் கடந்து செல்ல முடியும்.

மெனோபாஸ்

45-50 வயதைக் கடந்த பெண்களுக்கு, 12 மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு சுழற்சி ஏற்படாமல் இருந்தால், அவர்கள் மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அதாவது, சினைப்பையில் இருந்து கருமுட்டைஉற்பத்தியாவது நின்றுவிட்டது என்று அர்த்தம். பொதுவாக, மெனோபாஸ் 45-50 வயதில் நிகழலாம்.

இந்தச் செயல்பாடு ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவது இல்லை. 40 வயதுக்குப் பிறகு, மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இது, அவரவர்களின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். இந்தியப் பெண்களுக்கு, மெனோபாஸ் சராசரியாக 45 வயதில் ஏற்படுகிறது. மெனோபாஸ் கட்டத்தை அடையும் காலகட்டத்தில் சீரற்ற மாதவிலக்கு, பிறப்புறுப்பு உலர்ந்துபோதல், தூக்கமின்மை, மூட் ஸ்விங், உடல் எடை அதிகரிப்பு, சருமம் உலர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஈஸ்ட்ரோஜன் குறைபாடு

மன உணர்வுகளில் தொடங்கி, சிறுநீர்க் கசிவு வரை அனைத்துக்கும் காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். எலும்பு, இதயம், கர்ப்பப்பை, குடல் தொடர்பான செயல்பாடுகள், வைட்டமின் மற்றும் தாதுக்களை கிரகித்தல் போன்ற அனைத்துக்கும் உதவுவது ஈஸ்ட்ரோஜன். நாற்பதைத் தாண்டிய பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது, உடலில் பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

மூட் ஸ்விங்

அடிக்கடி எரிச்சலும், திடீரென்று நார்மலாகவும் மாறி மாறித் தோன்றி, உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவது மூட் ஸ்விங். ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஏற்படும் மாற்றங்களே இவை. சோகம், கவனமின்மை, பயம், அதீத இயக்கம், சோர்வு, பதற்றம், டென்ஷன், மகிழ்ச்சி போன்ற அனைத்து உணர்வுகளும் மாறி மாறி வரலாம். மனம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதால், தூக்கமின்மைப் பிரச்னையும் சேர்ந்தே வரும். மனதை அமைதிப்படுத்தும் கலைகளில் ஈடுபடலாம். சீரான உணவுப் பழக்கத்தையும் வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்கலாம். அவசியம் புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

எலும்புகள் தொடர்பான பிரச்னை

ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு வயது ஏற ஏற எலும்புகளின் வலிமை குறையத் தொடங்கும். மெனோபாஸுக்குப் பிறகு, பெண்களுக்கு எலும்பு மெலிதல் பிரச்னை அதிகம் தாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களில் செயல்பாடுகள் குறைவது, எலும்பின் தரம் குறைதல், வைட்டமின் டி மற்றும் கால்சியம் பற்றாக்குறை, உடல் பருமன், உடலுழைப்பு இல்லாதது, கோலா குளிர்பானங்கள் அருந்துவது, புகை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றால், எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. சிறு வயதிலிருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை வெயிலில் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

பிறப்புறுப்பில் வறட்சி

ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், பிறப்புறுப்பு வறண்டுபோகும். உயவுத்தன்மை (Lubricant) இருக்காது. இதனால், செக்ஸில் ஈடுபடும் ஆர்வம் குறையும். மார்பகம், முடி, இடை என உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த உடல் மாற்றங்கள் இயல்பானதுதான் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை எனில், மனரீதியானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சிறுநீர்க் கசிவு

பல பெண்களுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த இடத்திலேயே சிறுநீர் கசியும் பிரச்னை இருக்கிறது. பயணத்தின்போது, வேலை செய்யும் இடங்களில் இந்த சிறுநீர்க் கசிவால் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். பலருக்கும் இதை வெளியில் சொல்வதிலும் தயக்கம் இருக்கிறது. எலாஸ்டிசிட்டி போய்விடுதல், இளம் வயதிலே கர்ப்பப்பை அகற்றுதல், தசைகள் தளர்வடைதல், மெனோபாஸ், உடல்பருமன், தொடர் இருமல், மலச்சிக்கல், நரம்பு தொடர்பான பிரச்னைகள், மூன்று முறைக்கும் மேல் சுகப்பிரசவம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் உடலில் அழுத்தம் அதிகமாகி, சிறுநீர் கசிவுப் பிரச்னை ஏற்படுகிறது.

அடிக்கடி, காபி, டீ குடிப்பது, எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது, கேக், கிரீம்ஸ், சாக்லெட் சாப்பிடுவது, அதிக அளவில் நீர் அருந்துவது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிகமான எடையைத் தூக்குவது, குழந்தையிலிருந்தே அதிக நேரம் சிறுநீரை அடக்கிப் பழகுவது போன்ற பழக்கங்களாலும் சிறுநீர்க் கசிவு பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.AApT40o

Related posts

7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிப்பது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! வாரத்தில் 3 நாட்கள் முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்! அப்புறம் பாருங்க

nathan

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்

nathan

காலை வெறும்வயிற்றில் தண்ணீர் குடிங்க!நோயாளிக்கு நடக்கும் அற்புதம் என்ன?

nathan

மஞ்சள் பற்கள் வெள்ளையாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க…

nathan

குழந்தைகள் கண் பார்வை வளம் பெறச் சாப்பிட ஏற்ற 12 உணவுகள்

nathan

வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கின்றதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

nathan

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

sangika