39.1 C
Chennai
Friday, May 31, 2024
1462166305 9466
எடை குறைய

கரிசலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்தால் உடல் பருமனை குறைக்கலாம்

கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகப் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு.

கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற கீரை வகைகளில் உள்ளதைப் போலவே கரிசலாங்கண்ணியிலும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

கரிசலாங்கண்ணிக் கீரை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. தசையைக் கடுமையாக விரைக்கச் செய்யும் “தணுக் வாய்வு” என்னும் கொடிய நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தில் இது முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணிக் கீரை உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையினால் ஒற்றடம் கொடுத்தால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் வற்றும்.

இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன் எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணிச் சாற்றைச் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்தத் தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தய்த்தால் வலி நீங்கும்.

எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கண்மை கண் நோய்களைத் தடுக்கிறது. இதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.1462166305 9466

Related posts

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் செஞ்சா ஈஸியா கொழுப்பு கரையும் தெரியுமா? முயன்று பாருங்கள்!

nathan

கண்டபடி சாப்பிட்டா எடை கட்டுக்குள் வராது

nathan

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?

nathan

கை, உதடு, வயிறி மற்றும் பின்பகுதி கொழுப்பை குறைப்பதற்கு எப்படி பேக்கிங் சோடா உதவுகிறது

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

உங்களுக்கு தெரியுமா அன்னாசியை இப்படி சாப்பிடுங்கள்.. வயிற்றுச் சதை பாதியாய் போய்விடும்!!

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி…..

sangika