25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
prawn 65 30 1462005749
அசைவ வகைகள்

இறால் சில்லி 65

இறால் பலருக்கும் பிடித்த ஓர் கடல் உணவு. இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் இறாலை சில்லி 65 செய்து சுவைத்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு இறால் சில்லி 65 எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

ஏனெனில் இங்கு இறால் சில்லி 65 எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் – 20 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1/4 கப் கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு தண்ணீர் – சிறிது

செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி!!!

prawn 65 30 1462005749

Related posts

மட்டன் கடாய்

nathan

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

nathan

சூப்பரான ரவா மீன் ப்ரை

nathan

மொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா?..

nathan

புதினா இறால் மசாலா

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan