36.4 C
Chennai
Wednesday, May 29, 2024
cashew chicken curry
அசைவ வகைகள்

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

சிக்கன் கிரேவியில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் முந்திரி சிக்கன் கிரேவி. இந்த முந்திரி சிக்கன் கிரேவியை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதத்துடன் சாப்பிட்ட சுவையாக இருக்கும்.

மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்ற சமையலும் கூட. சரி, இப்போது அந்த செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 15
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தயிர் – 1 டீஸ்பூன்
பால் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – பாதி
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

முந்திரி – 8
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
புதினா – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!cashew chicken curry

Related posts

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

செட்டிநாடு காடை பிரியாணி…….

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan

மொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா?..

nathan

கொத்து பரோட்டா

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika