27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
20 1434786703 19tomato
ஆரோக்கிய உணவு

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!

அதிகப்படியான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, வேலைப்பளு மற்றும் அன்றாடம் பல சவால்களை சந்திப்பதால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமை விரைவிலேயே குறைந்துவிடுகிறது. உடலின் வலிமை குறைவதால் சிறு பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக தெரிகிறது. மேலும் உடலும் எப்போதும் மிகவும் சோர்வுடன் இருக்கிறது.

முக்கியமாக மன அழுத்தத்தினால், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. ஆகவே மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, சில உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அதுவும் உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

சரி, இப்போது உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம்

வாழைப்பழம் மிகவும் சிறப்பான உடல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. அதற்கு அதில் உள்ள இயற்கை சர்க்கரைகளான சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை அதிக அளவில் இருப்பது தான். இதனால் தான் இதனை உட்கொண்ட உடனேயே உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சிறப்பாகவும், வலிமையுடனும் செயல்பட முடிகிறது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலும் வலிமை அடையும். மேலும் இது கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட நொதிகளை உற்பத்தி செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

அவகேடோ

அவகேடோவில் உள்ள கார்டினைன் உடலின் ஆற்றலையும், வலிமையையும் அதிகரிக்கும். அதே சமயம் அவகேடோவில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், அவை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உடைத்து, செரிமானத்தையும் அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் பொருட்களும் உடலின் வலிமையை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்டினைன் என்னும் அமினோ ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இந்த அமினோ ஆசிட் உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். பால் பொருட்கள் தசைப் பிடிப்புக்கள் மற்றும் உடல் சோர்வை தடுக்கும். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகளும் வலிமையோடு இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரித்து, நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களையும் உடைக்கும். இதற்கு அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தான் காரணம்.

ராகி

கேழ்வரகு என்னும் ராகியில் கால்சியம் அதிகம் உள்ளது மற்றும் இதனை சாப்பிடுவதால் உடலின் வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் இதில் ஜிங்க் உள்ளதால், இது கருத்தரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும். மேலும் இது நீரிழிவிற்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் உடல் பருமனை குறைக்கவும் உதவும்.

முட்டை

முட்டையில் வைட்டமின்களான பி மற்றும் டி அதிகம் இருக்கிறது. இவை சோர்வைப் போக்கக்கூடியவை. முக்கியமாக வைட்டமின் டி உணவுகளை உடைத்து உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். மேலும் உடலின் வலிமையும் அதிகரிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடலானது வைட்டமின்களையும், கனிமச்சத்துக்களையும் எளிதில் உறிஞ்ச உதவுகிறது. மேலும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு வலிமையை அளிக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலையில் ஜிங்க், அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் போன்ற உடலின் வலிமையை அதிகரிக்கும் மற்றும் மலட்டுத்தன்மையைத் தடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் வேர்க்கடலை இதயத்திற்கு நல்லது மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

மீன்

மீன்களில் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் உடலின் வலிமையை அதிகரிக்கும் புரோட்டீன் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனநிலையும் மேம்படும். எனவே உடலின் வலிமையை அதிகரிக்க வாரத்திற்கு 3 முறையாவது மீன் சாப்பிட்டு வாருங்கள்.

தேன்

தினமும் படுக்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறைந்து, உடலின் வலிமை மேம்படும்.

சோயா

சோயா பொருங்டகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் புரோட்டீன்கள் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் இது ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஐசோப்ளேவோன்களை உள்ளடக்கியுள்ளது.

மாம்பழம் மற்றும் பப்பாளி

மாம்பழம் மற்றும் பப்பாளியில் பயோப்ளேவோனாய்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே இந்த பழங்கள் கிடைக்கும் போது தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் அமினோ ஆசிட்டான கார்டினைன் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலும் வலிமையுடன் இருக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை கூட உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். மேலும் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தை விட 3 மடங்கு அதிகமான வைட்டமின் சியை கொண்டது. இதனால் இவற்றை உட்கொண்டு வந்தால், உடலின் வலிமையும், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

தர்பூசணி

தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் 90 சதவீத நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இது உடல் வறட்சியைத் தடுக்கும் மற்றம் எனர்ஜியின் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயின் நன்மைகளில் ஒன்று தான் உடலின் வலிமையை அதிகரிக்கும் என்பது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமையாக நிறைந்திருப்பதால், இது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய்களின் தாக்கங்களையும் குறைக்கும்.

தக்காளி

தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் புரோஸ்டேட் மற்றும் இரைப்பை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சியா விதைகள்

சியா விதைகள் உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் சிறந்தது. மற்ற உணவுப் பொருட்களை விட இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளும், நார்ச்சத்தும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமையாக நிறைந்துள்ளது. இது இதயம் மற்றம் மூளைக்கு நல்லது.

20 1434786703 19tomato

Related posts

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

மருந்துச் சோறு-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

nathan

தினமும் 6 பாதாம்கள் போதுமானது!….

sangika

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்!

nathan

நீரிழிவு ஆபத்தை உண்டாக்கும் ஆரஞ்சு பழரசத்தை தவிர்ப்பீர்

nathan

வாரம் ஒருமுறை இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

காளான் மசாலா

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

nathan