31.1 C
Chennai
Monday, May 20, 2024
05 1444029815 3 scalp
தலைமுடி சிகிச்சை

தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

பல ஆண்களுக்கு தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு காரணம் அதிகம் ஊர் சுற்றுவதால் தலையில் அழுக்கு சேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக இருந்தாலும், தினமும் ஷாம்பு போட்டால், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிலர் மைல்டு ஷாம்பு தான் பயன்படுத்துகிறேன் என்று சொல்வார்கள்.

என்ன தான் இருந்தாலும், ஷாம்புக்களை தலைக்கு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் எந்த ஒரு ஷாம்புவாக இருந்தாலும், அவற்றில் ஒருசில கெமிக்கல்கள் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும். அதில் ஒரு முக்கியமான ஒன்று தான் சோடியம் லாரில் சல்பேட் (SLS) அல்லது சோடியம் லாரீத் சல்பேட் (SLES).

இந்த ஏஜென்டுகள் நுரையைத் தருவதில் சிறந்தது மட்டுமின்றி, மிகவும் விலை மலிவானதும் கூட. சல்பேட்டிற்கு தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் தன்மை உள்ளது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக அன்றாடம் பயன்படுத்தி வந்தால், அதனால் தலைமுடி தான் பாதிக்கப்படும்.

இங்கு தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அலர்ஜி

பெரும்பாலான ஷாம்புக்களில் சோடியம் குளோரைடு அல்லது உப்பு கலக்கப்பட்டிருக்கும். இந்த பொருள் தலைச் சருமத்தை உலரச் செய்து, தலையில் அரிப்புக்களை அதிகப்படுத்தி, அலர்ஜியை ஏற்படுத்திவிடும். வேண்டுமானால், தினமும் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவோரைப் பாருங்கள், தலையை சொறிந்தவாறு இருப்பார்கள்.

முடி உதிர்வது

ஷாம்புக்கள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் பதப்படுத்தும் கெமிக்கல்களான பாராபீன்கள் அல்லது பார்மால்டிஹைடுகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்கள் மயிர் கால்களை வலிமையிழக்கச் செய்து முடி உதிர்வதை அதிகப்படுத்தும்.

எரிச்சல்

ஷாம்புக்களில் நிறங்களைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிறமிப் பொருட்கள், தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் தலைச்சருமத்தில் படும் போது, கடுமையான எரிச்சல்களை ஏற்படுத்தும்.

முடி வெடிப்பு

அடிக்கடி அல்லது தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு வந்தால், அதில் உள்ள சல்பேட் முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதோடு, தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருக்கும். இப்படி தலைமுடி அதிக வறட்சியுடன் இருந்தால், முடியின் ஆரோக்கியம் தான் போகும்.

முடி வளர்ச்சி

கண்டிஷனர்கள் முடிக்கு மென்மைத்தன்மையையும், ஈரப்பதத்தையும் வழங்கும். ஆனால் அதை அடிக்கடி பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி தான் தடைப்படும்.

கண் எரிச்சல்

மற்றொரு முக்கியமான காரணம், தலைக்கு ஷாம்புவை அதிகம் பயன்படுத்தினால், நாளடைவில் கண்களில் எரிச்சல் ஏற்படக்கூடும்.

புற்றுநோய்

புற்றுநோய்களை உண்டாக்கும் கார்சினோஜென்களாகக் கருதப்படும் கெமிக்கல்கள் ஷாம்புக்களில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மோசமான கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புக்களை அதிகமாக பயன்படுத்தினால், தொண்டை, மூக்கு அல்லது இரத்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்களே கவனமாக இருங்கள். இனிமேல் ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைத் தந்த சீகைக்காயைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

05 1444029815 3 scalp

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஹேர் கலர் மற்றும் டை அடிக்கும்போது இந்த தவறுகள மட்டும் தெரியாம கூட செய்யாதீங்க…!

nathan

இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan

அழகுக்கு அழகு கூட்ட உதவிடும் பகுதி-தலைமுடி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர்டையே பயன்படுத்தாமல் ஒரே வாரத்தில் நரை முடியை கருமையாக்க வேண்டுமா?

nathan

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

nathan

கூந்தல் எண்ணெய் பசை நீங்க

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…முடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?

nathan