31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?

கூந்தலைப் பாதுகாக்க சில வழிகள்….

கற்றாழை : இதில் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் தன்மைகள் அதிகம் இருக்கிறது. இது ஒரு சதைப்பற்றுள்ள செடி. இதில் வழுவழுப்பான ஒரு திரவம், ஜெல்லி போல் இருக்கும். இந்த திரவத்தை சரும பராமரிப்பில் அதிகம் பயன்படும். ஏனெனில் இதில் ஈரப்பசை அதிகமாக இருக்கும்.

அந்த ஜெல்லியை தலைக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்தால் சூரியனிடமிருந்து வரும் கொடிய அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து கூந்தல் பாதிப்படையாமல் காக்கும்.

டீ இலைச் சாறு : இது ஒரு சிறந்த விலைமதிப்புபில்லாத, ஈஸியாக கிடைக்கக்கூடிய, பாதுகாப்பான இயற்கைப் பொருள். இது கூந்தலை சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் (UV rays) இருந்து கூந்தலைப் பாதுகாக்கிறது. மேலும் இது கூந்தலை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.

சிறிது டீத்தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து, ஒரு கப்பில் வடிகட்டி தலையில் ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இதனால் முடியானது சூரியனிடமிருந்து வரும் கதிரால் பாதிப்படையாமல் இருப்பதோடு, கூந்தலுக்கு நிறத்தையும் தருகிறது.

ஹென்னா : ஹென்னா பவுடரை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து இரவில் ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்து அதனை கூந்தலுக்கு தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளித்து பார்த்தால் கூந்தலானது சற்று கனமாக இருக்கும். இது கூந்தலுக்கு நிறத்தை மட்டும் தந்து, சூரியக் கதிரில் இருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல், கூந்தல் உதிர்வதையும் தடுக்கிறது.

எள் எண்ணெய் : 5-6 துளி எள் எண்ணெயை சீப்பில் தடவி, பின் அற்த சீப்பை வைத்து கூந்தலை சீவுங்கள். இதனால் சூரியக் கதிர்கள் கூந்தலை தாக்காமல் இருப்பதோடு, கூந்தலும் மென்மையாகவும் பட்டுப்போலும் இருக்கும். வேண்டுமென்றால் வேறு எந்த எண்ணெயை வேண்டுமானாலும் இவ்வாறு உபயோகிக்கலாம்.

வைட்டமின் ஈ : முடியில் வைட்டமின் ஈ இருந்தால் கூந்தலானது ஆரோக்கியமாக, பலமாக இருக்கும். 2-3 வைட்டமின் ஈ மாத்திரைகளை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை நன்கு கரைத்து, பின் கூந்தலில் தெளிக்க வேண்டும். இதனால் அந்த வைட்டமின் கூந்தலுக்கு ஒரு திரை போல அமைத்து, சூரியனிடமிருந்து பாதுகாக்கிறது. இவ்வாறெல்லாம் செய்து கூந்தலை பராமரித்தால், கூந்தலானது ஆரோக்கியமாக, உதிராமல் அழகாக இருக்கும்.

Related posts

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

nathan

பெண்களே நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக்க வேண்டுமா?

nathan

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!! இளநரையை முழுமையாக போக்க வேண்டுமா:?

nathan

கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்

nathan

கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்

nathan

முடி அடர்த்தியாக வளர

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

தேன் இருந்தால் முடி உதிர்வை ஈஸியா தடுக்கலாம்!

nathan

பெண்களே உங்க முடி அளவுக்கு அதிகமாக கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan