37.9 C
Chennai
Monday, May 12, 2025
0hcfdPK
முகப் பராமரிப்பு

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

என்னுடைய தோழி தானாகவே வீட்டில் ரெடிமேட் கொலாஜன் மாஸ்க் வாங்கி முகத்துக்கு உபயோகிக்கிறாள். அது முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என்கிறாள். கொலாஜன் ஷீட் பற்றி மேலும் தகவல்கள் சொல்ல முடியுமா?

அழகுக்கலை நிபுணர் மேனகாகொலாஜன் மாஸ்க் மற்றும் கண்களுக்கான பேடுகள் பியூட்டி பார்லர்களில் அழகுக்கலை நிபுணர்களால் பயன்படுத்தப்படுபவை. இந்த மாஸ்க்குகள் மெல்லிய பேப்பர் மாதிரி இருக்கும். கெமிக்கலோ, கலரோ, வாசனையோ சேர்க்கப்பட்டிருக்காது. முகத்தில் போட ஏதுவாக கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளில் இடைவெளி விடப்பட்டிருக்கும்.

அதை முகத்தில் வைத்து, லேசாக ஈரப்படுத்தினால், அது மென்மையான ஜெல் போல மாறி, அப்படியே முகத்தில் படியும். மற்ற மாஸ்க்குகள் போல இது சுருங்கிப் போகவோ, கிழியவோ வாய்ப்பில்லை. சிறிது நேரத்தில் அந்த ஜெல் முழுவதும் சருமத்தினுள் ஊடுருவி, மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் சரியாக்கும். சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.

கண்களுக்கு அடியில் காணப்படுகிற சுருக்கங்கள், கருவளையங்களுக்கான சிகிச்சையிலும் கொலாஜன் ஐ பேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கொலாஜன் மாஸ்க்குகளை அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் உபயோகிப்பதுதான் சிறந்தது. சுய மருத்துவம் போல சில வித சுய அழகு சிகிச்சைகளும் ஆபத்தானவையே.0hcfdPK

Related posts

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

சரும அழகை பாதுகாக்க கொத்தமல்லி பேஸ் பக்

nathan

நீங்களே சொந்தமாக உங்களுக்கான கேரட் சோப்பை எவ்வாறு தயாரிப்பது……

sangika

முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

சருமத்திற்கு குளுமை தரும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan