கோடைக்காலம் என்பதால் வெயில் வாட்டி வதைக்கிறது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே தமிழகத்தில் கடும் வெயிலால் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை சமாளிக்க தர்பூசணி பழங்களை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால். அவ்வாறு சாப்பிடும் [url=http://tamilbeautytips.com/ தர்பூசணி [/url]நல்ல பழமா என்பதை பார்த்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தர்பூசணி பழங்களை வாங்கும்போது அதனை முழுமையாகச் சுற்றிப் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஊசி போட்டது போன்ற துவாரங்கள் இருந்தால் உடனே பழங்களை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பழங்களில் ஊசி மூலம் சிறு சிறு துவாரம் போட்டு, அதனை தண்ணீரில் ஊறவைத்து எடையைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சி செய்யக்கூடும்.
தர்பூசணியை அறுத்த உடன் சாப்பிடவும். பொதுவாகவே பழங்களை நீண்ட நேரும் அறுத்து வைத்த பின் சாப்பிட்டால் கிருமிகளின் தொற்று ஏற்ப்படும்
சாப்பாடு சாப்பிடும் முன்/பின் தர்பூசணியை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உடலில் உள்ள நீரின் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தர்பூசணி பழக்களில் சிகப்பு நிற ரசாயன திரவத்தை கலந்து சிலர் விற்பனை செய்கின்றனர். இயற்கையான மங்கலான சிவப்பு நிறத்தில் உள்ள தர்பூசணி பழத்தில் தேவையில்லாமல் ரசாயன சிவப்பு நிறத்தை கலந்து விற்பனை செய்வது ஆபத்தான செயலாகும். காரணம் அந்த ரசாயனம் மனிதனின் உடலில் சென்று தேவையில்லாத வயிற்றுக் கோளாறு, தோல் அரிப்பு, குடல் பாதிப்பு, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக்குறைவு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.