கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே! அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், டானிக் எதுவும் தேவையில்லை. பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.
பசலைக்கீரையின் இளந்தளிரை சாறு எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்து
வந்தால், உடல் ஆரோக்கியம் பெறும். மேலும், எந்த வகையிலாவது பசலைக்கீரையை சாப்பிட்டு வந்தால்… வாந்தி, ஈரல் உபாதைகள்,
நீரடைப்பு, மூத்திரக்கடுப்பு நோய்கள் குணமாகும்.
பசுவெண்ணெயுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.