fever sick
மருத்துவ குறிப்பு

உங்களது பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பெருங்குடல் புண் என்பது பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் ஓர் நிலை. இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும்.

ஆரம்பத்தில் வயிற்று வலியில் ஆரம்பித்தாலும், நிலைமை மோசமாகும் போது இதன் அறிகுறிகளும் தீவிரமாக காணப்படும். இங்கு உங்களுக்கு பெருங்குடல் புண் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், சற்றும் தாமத்திக்காமல் மருத்துவரை சந்தியுங்கள். இல்லையெனில் உயிரையே இழக்கும் அளவில் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

வயிற்று வலி
சாதாரணமாக வயிற்றில் பிரச்சனை இருந்தால், முதலில் வயிற்று வலி தென்படும். அதிலும் பெருங்குடல் புண் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திப்பதோடு, வயிற்றுப் பிடிப்புக்களையும் அனுபவிக்க நேரிடும்.

மலக்குடல் சார்ந்த வலி
பெருங்குடல் புண் இருப்பின் மலப்புழையில் கடுமையான வலியை சந்திக்க நேரிடுவதோடு, மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவும் ஏற்படும்.

அவசரம்
அவசரமாக மலம் கழிக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் மலம் கழிக்க முடியாது. இம்மாதிரியான நிலையை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறியுங்கள்.

எடை குறைவு
முக்கியமாக பெருங்குடல் புண் இருந்தால், திடீரென்று உங்கள் உடல் எடை குறையும். உடல் எடை எக்காரணமும் இல்லாமல் குறைந்தால் சந்தோஷப்படாமல், மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது பெருங்குடல் புண்ணிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

சோர்வு
மிகுந்த களைப்பை உணர்கிறீர்களா? இம்மாதிரியான சோர்வு பல உடல்நல பிரச்சனைகளுக்கு பொதுவான அறிகுறியாக இருப்பதால், சாதாரணமாக விடாதீர்கள்.

காய்ச்சல்
ஆம், காய்ச்சல் கூட பெருங்குடல் புண் இருப்பதற்கான அறிகுறியாகும். பெருங்குடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தால், காய்ச்சல் மூலம் அறிகுறியை வெளிப்படுத்தும். அதிலும் காய்ச்சலானது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வயிற்றுப்போக்கு
பெருங்குடல் புண் இருந்தால், வயிற்றுப்போக்கை சந்திப்பதோடு, வயிற்றுப் போக்கின் போது இரத்தமும் வெளியேறும். அதிலும் இந்த வயிற்றுப்போக்கினால் தூக்கத்தை இழக்க நேரிடும். அந்த அளவில் மோசமாக இருக்கும்.

குறிப்பு
மேற்கூறிய அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவும் பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து உள்ளது.
fever sick

Related posts

தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

nathan

nathan

உங்களுக்கு தெரியுமா மாதவிடாயை தள்ளிப் போட உதவும் இயற்கை வைத்தியங்கள்!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

nathan

இதயம் பற்றிய அரிய தகவல்கள்

nathan

சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை

nathan

பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம்….

sangika

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!

nathan