30.2 C
Chennai
Sunday, May 18, 2025
WPAp7EDBsQ
Other News

திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்…!

நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

 

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா ‘எக்ஸ்’ இணையதளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி மிகவும் கேவலமாகவும், புண்படுத்தும் விதமாகவும் பேசிய வீடியோ குறித்து கேள்விப்பட்டேன். அவரது பேச்சை கண்டிக்கிறேன். அவர் தொடர்ந்து லட்சியமாக இருக்கலாம், ஆனால் அவரைப் போல மோசமான ஒருவராக நான் நடிக்க வேண்டியதில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப் போன்ற ஒருவருடன் இனி ஒரு படத்தில் நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கர்பாத்தி மற்றும் பலர் நடிகை த்ரிஷாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். மன்சூர் அலிகானின் பேச்சு கண்டிக்கத்தக்கது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கவலைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘அய்யா பெரியோர்களே…. திடீரென்று திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகளை அனுப்பினாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்தில், நான் வருகிற தேர்தலில் ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடுகிறேன் என்று சொன்ன வேளையில், வேண்டும் என்றே யாரோ கொம்பு சீவி விட்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த பெண்ணை உயர்வாகத்தான் சொல்லிருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ‘அனுமார் சிரஜ்சீவி மலையை கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டுவந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதில் இல்லை. எனது ஆதங்கத்தை காமெடியாக சொல்லிருப்பேன். அதை கட் பண்ணி பதிவிட்டு கலகம் பண்ண நினைத்தால் நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுறவனா…? யாரோ திரிஷாவிடம் தவறாக வீடியோவை காட்டி இருக்கிறார்கள்’ என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர், “சார், எல்லா நடிகர்களும் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆகிவிட்டார்கள், பல ஹீரோயின்கள் பெரிய தொழிலதிபர்களை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டனர்.நான் சினிமாவில் நடித்திருக்கிறேன்.எனக்கு சக நடிகைகள் மீது எப்போதும் மரியாதை உண்டு. அதை நாம் அனைவரும் அறிவோம்.உலகில் நிறைய பிரச்சனைகள் உள்ளன.

Related posts

கத்ரீனா கைப்பின் மார்பிங் படம் வைரல்!

nathan

ஈரான் மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

nathan

3 மாசம் கர்ப்பமா இருந்தேன், அதான் அந்த பாட்ல சரியா நடனம் ஆடல

nathan

பள்ளி நண்பர்களுடன் நடிகர் தனுஷ்…

nathan

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

nathan

நடிகை காயத்ரி யுவராஜின் மகள் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

nathan

தனுஷிற்கு தெரியாமல் மகன் வாழ்க்கைக்கு முதல் அடிதளம்!

nathan

கலக்கும் பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதி

nathan

ரட்சிதா கொடுத்த பேட்டி – வைரலாகும் வீடியோ

nathan