31.3 C
Chennai
Saturday, May 17, 2025
Other News

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

நடிகை ஐஸ்வர்யா ராயை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்தில் பேசிய ரசாக், “நேற்று கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகம் குறித்து விவாதித்தோம், அங்கு தற்செயலாக ஐஸ்வர்யா ராயின் பெயரை குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் நினைக்கவில்லை.

முன்னதாக பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர்.

அப்துல் ரசாக்கின் மோசமான கருத்துக்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர். இது ஒரு மோசமான உதாரணம் என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அப்துல் ரசாக் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

Related posts

கணவருடன் பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்..

nathan

இளம்பெண்ணால் அதிர்ச்சியான பொலிஸ்!!4வது வேண்டாம், 5 வது கணவருடன் வாழ்கிறேன்

nathan

லெக்கின்ஸ் பேண்ட் அணிந்ததால்.. என் வீட்டிலேயே இந்த கொடுமை நடந்தது..!

nathan

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு

nathan

குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா..

nathan

தனுசு ராசி – மூல நட்சத்திரம் பிறந்த பெண்

nathan

இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆன சங்கர்!

nathan

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பார்ட்டி கொண்டாடிய விசித்ரா ……

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan