30.2 C
Chennai
Sunday, May 18, 2025
Other News

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

நடிகை ஐஸ்வர்யா ராயை புண்படுத்தும் வகையில் பேசியதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்தில் பேசிய ரசாக், “நேற்று கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகம் குறித்து விவாதித்தோம், அங்கு தற்செயலாக ஐஸ்வர்யா ராயின் பெயரை குறிப்பிட்டேன். தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் நினைக்கவில்லை.

முன்னதாக பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர்.

அப்துல் ரசாக்கின் மோசமான கருத்துக்காக நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர். இது ஒரு மோசமான உதாரணம் என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அப்துல் ரசாக் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

Related posts

சற்றுமுன் நடிகை மீரா மிதுன் கைது

nathan

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்..

nathan

முடியை கருப்பாக மாற்ற ஏழு நாட்கள் போதும்

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் யுகேந்திரன் வாசுதேவனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

நடிகர் பிரகாஷ் ராஜ் மனைவியுடன் விடுமுறை கொண்டாட்டம்

nathan

5-ம் தேதி பிறந்தவங்க காதல் திருமணம் செய்வார்களாம்

nathan

நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5 ஆவது நாடானது ஜப்பான்

nathan

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக்கின் குடும்ப புகைப்படம்

nathan

பஞ்சாபி விவசாயி இயற்கை விவசாயத்தில் எப்படி நல்ல வருமானம் ஈட்டுகிறார்?

nathan