27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
c2485444 3x2 1
Other News

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, தமிழில் ‘ஜெமினி, புதிய கீதை, எந்திரன், பாபநாசம்போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தியுடன் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்தில் பல கேள்விகள் எழுந்தன. அவர் மது அருந்தியதால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதனையடுத்து கலாபவன் மணியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு, கலாபவன் மணியின் மரணம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் நடந்ததாகவும், கொலை இல்லை என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலை வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன், தினமும் 12-13 பாட்டில்கள் பீர் குடித்ததால் கலாபவன் மணியின் மரணம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்தாலும், கலாபவன் மணி அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இறந்த மார்ச் 6, 2016 அன்று மதியம் 12 மணியளவில் பீர் பாட்டிலை குடித்ததாகவும், பிரேத பரிசோதனையில் அதில் மெத்தில் ஆல்கஹால் இருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

Related posts

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ்

nathan

சைலண்டா நடந்து முடிஞ்ச சஞ்சய் பட பூஜை

nathan

எதிலும் புத்திசாலித்தனமாக செயல்படும் ராசி – which zodiac sign is the smartest

nathan

முதல் நாள் லியோ படத்தின் வசூல் இத்தனை கோடி வருமா..

nathan

கடலில் சுறாவிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய திமிங்கலம்

nathan

ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி..

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

nathan

கணவரிடம் தகாத உறவு – கொல்ல முயன்ற அக்கா!

nathan