26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 coconut podi 1660217464
ஆரோக்கிய உணவு OG

தேங்காய் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் -1 கப்

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* வரமிளகாய் – 10-15

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3

* புளி – 1 சிறிய துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்1 coconut podi 1660217464

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

Thengai Milagai Podi Recipe In Tamil
* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)

* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

பலாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

nathan

வேர்க்கடலை உள்ள சத்துக்கள்

nathan

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் -olive oil benefits in tamil

nathan

பக்வீட்: buckwheat in tamil

nathan

pomegranate in tamil : மாதுளை பழத்தின் நன்மைகள்

nathan

ஆண்களுக்கு வால்நட் நன்மைகள்

nathan

கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள்

nathan

fennel seed in tamil :பெருஞ்சீரகம் விதைக்கு பின்னால் உள்ள காரமான ரகசியம்: அதன் ஆரோக்கிய நன்மை

nathan

இன்சுலின் சுரக்கும் உணவுகள்

nathan