கேரள மாநிலம் எர்ணாகுளம் கலமசேரியில் உள்ள கோட்ரான் மையத்தில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில், கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் கலந்து கொண்ட பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரார்த்தனை தொடங்கிய சில நொடிகளில் முதல் குண்டு வெடித்தது. மக்கள் பீதியில் மாநாட்டு மையத்தை விட்டு வெளியேறியபோது, இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார், `குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், யெகோவாவின் சாட்சிகளை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார், `குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடகரா காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், யெகோவாவின் சாட்சிகளை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொண்டார். நாங்கள் எங்கள் விசாரணையை தீவிரப்படுத்துகிறோம்.”