33.3 C
Chennai
Friday, May 31, 2024
1577309 9
Other News

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாந்தி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு லியோ படம் நேற்று வெளியானது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காலை 7 மணிக்கு திரையிட தடை விதிக்கப்பட்டதால் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

நேற்று காலை முதல் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். முதன்முறையாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் `லியோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என திரையுலக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“லியோ” படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இந்தியப் படமொன்றின் முதல் நாள் வசூல் சாதனையைப் படைத்துள்ளது `லியோ’ திரைப்படம்.

Related posts

இலங்கையில் மகளை காதலித்த இளைஞனுக்கு நடு வீதியில் அதிர்ச்சி கொடுத்த தாய்

nathan

24 வயது மனைவியுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 54 வயது தொழிலாளி!

nathan

சித்தியுடன் பிக் பாஸ்.. என்ட்ரி கொடுக்கப்போகிறாரா ஜோவிகா?

nathan

சின்மயி வீட்டில் குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் சமந்தா

nathan

ஜெயிலர் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்..

nathan

கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் காதலன்?..

nathan

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி, அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்

nathan

மேஷம் முதல் கன்னி வரை குரு பெயர்ச்சி பலன்கள்!

nathan

இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க…

nathan