29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1577309 9
Other News

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாந்தி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு லியோ படம் நேற்று வெளியானது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காலை 7 மணிக்கு திரையிட தடை விதிக்கப்பட்டதால் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

நேற்று காலை முதல் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். முதன்முறையாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் `லியோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என திரையுலக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“லியோ” படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இந்தியப் படமொன்றின் முதல் நாள் வசூல் சாதனையைப் படைத்துள்ளது `லியோ’ திரைப்படம்.

Related posts

வாய்ப்பிளக்க வைத்த நடிகை நந்திதா..படுக்கையறை காட்சி!!

nathan

பெண் பயணி முன் ஆபாச செயலில்

nathan

இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான்

nathan

சிறுமிக்கு திடீர் “ஹார்ட் அட்டாக்”..

nathan

பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகர் அஜித்! எங்கே தெரியுமா..

nathan

திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து

nathan

புகை பழக்கத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அர்ச்சனா.

nathan

ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி

nathan

லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த திரிஷா..

nathan