24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 double beans pulikuzhambu 1668676152
சமையல் குறிப்புகள்

பீன்ஸ் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் – 1/4 கப்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 10 பல் (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெல்லம்/சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* உலர்ந்த டபுள் பீன்ஸ் – 1/2 கப்1 double beans pulikuzhambu 1668676152

செய்முறை:

* முதலில் டபுள் பீன்ஸை சுடுநீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை குக்கரில் போட்டு, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

Double Beans Puli Kuzhambu Recipe In Tamil
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் புளிச்சாறு, வேக வைத்த டபுள் பீன்ஸ் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம்/சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், டபுள் பீன்ஸ் புளிக்குழம்பு தயார்.

Related posts

சுவையான திணை பாயாசம்

nathan

மட்டன் சிக்கன் மசாலா பவுடர்

nathan

என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

nathan

சூப்பரான வெங்காய போண்டா

nathan

தெரிஞ்சிக்கங்க…தமிழர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்கள் என்னென்ன?

nathan

வித்தியாசமான பூண்டு ரொட்டி

nathan

சுவையான மினி இட்லி ஃப்ரை!…

sangika

சுவையான பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்

nathan

மஞ்சள் வெங்காய சட்னி

nathan