26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
MTR%2BStyle%2Brava%2Bidli%2Brecipe
சிற்றுண்டி வகைகள்

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

இது எளிதில் செய்ய கூடிய சத்தான காலை நேர சிற்றுண்டி. இந்த வாரம் Friendship 5 Seriesயில் Instant Breakfast Ideas என்ற தலைப்பில் குறிப்புகளை பார்க்கலாம்…

Instant ரவா இட்லி செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய சில,
எப்பொழுதும் Fine Wheat Rava / Ravaவினை பயன்படுத்தவும். Coarse Ravaவினை பயன்படுத்தினால் கூடுதலாக வேக நேரம் எடுக்கும். அதே மாதிரி தண்ணீரின் அளவிலும் வித்தியசம வரும்.

எப்பொழுதும் ரவை 1 பங்கு என்றால அதில் கண்டிப்பாக 1/2 பங்குக்கு மேல் தயிர் சேர்த்தால் தான் இட்லி நன்றாக வரும்.

பேக்கிங் சோடாவினை குறைந்தது 1/2 – 3/4 தே,கரண்டி சேர்த்தால் இட்லி மிகவும் சூப்பராக இருக்கும்.

அவரவர் விருப்பம் போல, தாளிக்கும் பொருட்களை சேர்க்கலாம். விரும்பினால் தாளிக்காமலும் இட்லி செய்யலாம்.

கலந்த மாவு ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் , அதே மாதிரி ரொம்பவும் தன்ணீயாக இல்லாமல் இருக்க வேண்டும்.

அதே மாதிரி ரவையினை வறுத்து / வறுக்காமலும் சேர்க்கலாம். இதே மாதிரி , காய்கறிகள் வைத்து செய்த Instant Oats Rava Idli / Instant Rava Idliயினையும் பார்க்கவும்…

கொடுத்துள்ள அளவில் செய்தால் 8 பெரிய இட்லிகள் வரும்.

நீங்களூம் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.
MTR%2BStyle%2Brava%2Bidli%2Brecipe
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. கோதுமை ரவை (Fine Wheat Rava)- 2 கப்
. தயிர் – 1 கப்
. தண்ணீர் – 1 கப் சிறிது கூடுதலாக (அதிகம் சேர்க்க வேண்டாம்)
. உப்பு – தேவையான அளவு
. பேக்கிங் சோடா – 3/4 தே.கரண்டி

தாளித்து சேர்க்க :
. முந்திரி – சிறிது அலங்கரிக்க (விரும்பினால்)
. எண்ணெய் – 1 மேஜை கரண்டி
. கடுகு – தாளிக்க
. உளுத்தம்பருப்பு – 1/4 தே.கரண்டி
. கடலைப்பருப்பு – 1/4 தே.கரண்டி
. இஞ்சி – 1/4 தே.கரண்டி பொடியாக நறுக்கியது
. பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கி வைக்கவும். )
. கருவேப்பில்லை – 5 இலை
. பெருங்காயம் – 2 சிட்டிகை
. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு விரும்பினால்

MTR%2BStyle%2Binstant%2Brava%2Bidli%2Brecipe
செய்முறை :
. தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முதலில் முந்திரியினை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

. பிறகு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில், கடுகு + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு + இஞ்சி, பச்சை மிளகாய் , கருவேப்பிலை + பெருங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்,
mtr%2Binstant%2Brava%2Bidli%2Brecipe

. இதில் கோதுமை ரவையினை சேர்த்து மேலும் 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். (விரும்பினால் ரவையினை வறுக்காமலும் சேர்த்து கொள்ளலாம். )
mtr%2Binstant%2Brava%2Bidli%2Brecipe%2B1
. ரவையினை 2 – 3 நிமிடங்களில் ஆறவைத்து கொள்ளவும். ரவை ஆறும் சமயம், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

. ரவையுடன் தயிர் + தண்ணீர் சேர்த்து முதலில் கலக்கவும். அத்துடன் பேக்கிங் சோடா + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

mtr%2Binstant%2Brava%2Bidli%2Brecipe%2B2
. இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் முதலில் முந்திரியினை வைத்து அதன் மீது கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றவும்.

mtr%2Binstant%2Brava%2Bidli%2Brecipe%2B4
. இட்லி தட்டினை இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து தட்டு போட்டு மூடி 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

mtr%2Binstant%2Brava%2Bidli%2Brecipe%2B5
. சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Instant%2BRava%2BIdli%2BRecipe

Related posts

கோதுமை அடை பிரதமன்

nathan

கேரட் கொத்து சப்பாத்தி

nathan

உளுந்து வடை

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

சத்தான புதினா – கேழ்வரகு தோசை

nathan

முந்திரி வடை

nathan

ட்ரை கலர் சாண்ட்விச்

nathan

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan