25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
bc3ca pt 1
Other News

பொய் சொல்லும் இந்தியா !சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு-சீன மூத்த விஞ்ஞானி

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது, அங்கு அது 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் இறங்கும் பகுதியில் இரவு தொடங்கிய நிலையில், சூரிய வெளிச்சம் இல்லாததால் ரோவர் மற்றும் லேண்டரின் பணி நிறுத்தப்பட்டது. விக்ரம் லேண்டரைப் புதுப்பிக்கும் பணியில் விஞ்ஞானிகள் பகல் நேரத்துக்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்றினர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, லேண்டரை உயிர்ப்பிக்க முடியவில்லை. வெப்பநிலை -200 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் லேண்டர் செயலிழந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு என சீன மூத்த விஞ்ஞானி வாங் ஜுன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் துருவத்தில் இருந்து 619 கி.மீ தொலைவில் சந்திரயான் தரையிறங்கியதாகவும், ஆனால் அதை நிலவின் தென் துருவமாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி “விஞ்ஞானப் பிரச்சாரர்“ன் முதன்மை ஆய்வாளர் திரு.டி.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

”தென் துருவம் என்பது ஒரு புள்ளி. அதே போல் பூமியில் வடதுருவம், தென்துருவம் என்பது ஒரு புள்ளியை தான் குறிக்கும். உதாரணத்திற்கு நார்வே வடதுருவ நாடு அல்ல.. வடதுருவ பகுதி நாடு.

 

அதே போல் தான் சந்திரயான் தென் துருவப்பகுதியில் தான் இறங்கியது. தென் துருவப்புள்ளியில் இல்லை. ஆகவே.. தென் துருவம், தென் துருவப்பகுதி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. ” என்று கூறினார்.

ஆகவே… இனி நாம் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 இறங்கியது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்

Related posts

கே ஜி எஃப் 2, பொன்னியின் செல்வன் பட சாதனையை உடைத்து முன்னேறிய துணிவு.!

nathan

கணவர் சித்து உடன் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரேயா

nathan

கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

nathan

மாமனார்.. அறைக்கு தீ வைத்த மருமகள்.. வீடியோ எடுத்த கணவர்

nathan

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!

nathan

காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

nathan

10வருட போராட்டம்! 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நேபாள்!

nathan

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை…

nathan

Dora Bujji BREAKUP !! டோரா கூறிய அதிர்ச்சி தகவல்!!

nathan