35.1 C
Chennai
Saturday, May 10, 2025
2 tomato omelette 1669832205
அசைவ வகைகள்

தக்காளி ஆம்லெட்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* தக்காளி – 2

* வெங்காயம் – 1

* இஞ்சி – 1 இன்ச்

* பச்சை மிளகாய் – 1

* கொத்தமல்லி – சிறிது

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கரம் மசாலா – 1 சிட்டிகை

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – தேவையான அளவு2 tomato omelette 1669832205

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.

* பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.

Tomato Omelette Recipe In Tamil
* ஆம்லெட் கலவையானது மிகவும் நீராக இல்லாமல், மிதமான நிலையில் இருக்க வேண்டும்.

* இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.

* பின் அதில் ஒரு கரண்டி ஆம்லெட் கலவையை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும்.

* பின்பு அந்த ஆம்லெட்டை சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் ஆகும் போது தோசைக்கரண்டி பயன்படுத்தி திருப்பிப் போட வேண்டும். முன்னும் பின்னும் மொறுமொறுப்பானதும் எடுத்தால், சுவையான தக்காளி ஆம்லெட் தயார்.

Related posts

பெப்பர் மட்டன் வறுவல்

nathan

சுவையான…. மட்டன் சுக்கா

nathan

ஆட்டிறச்சி கறி

nathan

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா

nathan

ஸ்பைசி நண்டு மசாலா

nathan

உங்களுக்கு சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா…?

nathan

பசலைக்கீரை முட்டை பொரியல்

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan