தேவையான பொருட்கள்:
* முட்டை நூடுல்ஸ் – 1 பாக்கெட்
* முட்டை – 3
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
* மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் முட்டை நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, அதில் சிறிது எணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சோயா சாஸ், வினிகர் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Chinese Noodles Recipe In Tamil
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு பொடிமாஸ் செய்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சோயா சாஸ் கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அதில் முட்டை பொடிமாஸை சேர்த்து, மிளகுத் தூளைத் தூவி கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறினால், சுவையான சைனீஸ் நூடுல்ஸ் தயார்.