சமையல் குறிப்புகள்

மீல் மேக்கர் ப்ரை

1 mealmakerfry 1666180579

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் – 2 கப் (வேக வைத்தது)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் மூடியைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும்.

* பின்பு அந்த மீல் மேக்கரை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் எண்ணெயைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

Meal Maker Fry Recipe In Tamil
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அரைத்ததை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மீல் மேக்கர் ப்ரை தயார்.

Related posts

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

nathan

சுவையான காராமணி பொரியல்

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

nathan

முட்டை பொடிமாஸ்

nathan

குடைமிளகாய் கறி

nathan

சுவையான தக்காளி தொக்கு

nathan

செட்டிநாடு தேங்காய் குழம்பு

nathan