தேவையான பொருட்கள்:
* காளான் – 200 கிராம் (நறுக்கியது)
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
* ஸ்பிரிங் ஆனியன் – அலங்கரிப்பதற்கு…
ஊற வைப்பதற்கு…
* மைதா – 1 கப்
* சோள மாவு – 1/2 கப்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் – 1
* சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
* வினிகர் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து, நீர் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
Chilli Mushroom Recipe In Tamil
* பிறகு அதில் பிசைந்த காளானை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து பொரித்த காளானை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வகையில் கிளறி இறக்கி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி மஸ்ரூம் தயார்.