29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
fresh red onion1
மருத்துவ குறிப்பு

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம்

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. அல்லியம் சிபா என்ற தாவர பெயரை கொண்ட, ஆனியன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. உடலுக்கு வெப்பத்தை அளிப்பதால் வெங்காயம் என்று அழைக்கப்பட்டது. வெங்காயத்தை எடுத்துக் கொள்வதால் சளி பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது.

வெங்காய சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால், ஆஸ்துமாவுக்கு கூட ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. வெங்காயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக அமைகிறது. இதற்கு தேவையான பொருட்கள், வெங்காயம், தயிர். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் இரண்டு டீஸ்பூன் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்க்க வேண்டும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக அமைகிறது. இந்த தயிர் வெங்காய கலவையை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது காலை உணவுடன் சேர்த்து இதை சாப்பிட்டு வரலாம். வெங்காயத்தில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் மிகுந்து காணப்படுகிறது.

எமனகோக் என்ற நிலையில் மாத விலக்கை தூண்டக் கூடிய ஒன்றாக வெங்காயம் விளங்குகிறது. சிறுநீர் பாதையில் ஏற்படக் கூடிய அழற்சியை போக்கக் கூடிய தன்மையும் வெங்காயத்திற்கு உள்ளது. ஆன்டி பயாடிக், ஆன்டி ஃபங்கல் என்ற நிலையில் பற்களில் ஏற்படும் கிருமிகளை போக்கக் கூடியதாக வெங்காயம் விளங்குகிறது. ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரையை இது குறைக்கிறது. 50 கிராம் வெங்காயத்தில் 20 யூனிட் இன்சூலின் உள்ளது என்று கூறப்படுகிறது.

அதே போல் வெங்காயத்தாளை பயன்படுத்தி பொடுகு போன்றவற்றிற்கான மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வெங்காய தாள். வெங்காய தாளை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு அதை மிக்சியில் நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அதை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்னதாக இந்த சாறை தினமும் தலையில் நன்றாக தடவி 15 நிமிடங்கள் விட வேண்டும்.

பின்னர் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு எனப்படும் டேன்ட்ரப் பிரச்னைக்கு தீர்வாக இது அமையும். அதே போல் ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடுகளை போக்கக் கூடிய மருந்து ஒன்றை வெங்காயத்தின் விதைகளை கொண்டு தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வெங்காய விதை, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். வெங்காய விதையை நன்றாக நீர் விட்டு அலசி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் வெங்காய விதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து தேநீராக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தின் விதைகளை எடுத்து அதை தேநீராக ஆக்கி, அதனுடன் இனிப்பு சேர்த்து பருகி வருவதால் விந்தணு குறைபாடுகள் நீங்குகின்றன. விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவால் ஆண்கள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.fresh red onion1

Related posts

கொஞ்சம்..பெர்சனல்…!

nathan

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்……..

nathan

உங்களுக்கு தெரியுமா தாய் காரம் அதிகமான உணவை சாப்பிட்டால் தாய்ப்பால் காரமாக இருக்குமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

இந்த உணவுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்…!

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

கர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள்

nathan