25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
2 poori masala
சமையல் குறிப்புகள்

பூரி மசாலா

தேவையான பொருட்கள்:

* பெரிய உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி – 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2-3

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* முந்திரி – 10

* கடலை மாவு – 2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 1/2 கப்

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை நீரில் கழுவி, குக்கரில் போட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை கழுவி, தோலை உரித்துவிட்டு, கத்தியால் துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

Hotel Style Poori Masala Recipe In Tamil
* பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு அதில் முந்திரியை பொடியாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.

* அதன் பின் வெங்காயம், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் கடலை மாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து, 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார்.

Related posts

காளான் பிரியாணி

nathan

சுவையான காராமணி பொரியல்

nathan

பீன்ஸ் புளிக்குழம்பு

nathan

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

உருளைக்கிழங்கு மசால் தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி?….

sangika

சுவையான சுண்டைக்காய் வத்தக் குழம்பு

nathan

ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?

nathan

சுவையான காளான் சீஸ் சாண்ட்விச்

nathan

அருமையான வெங்காய குருமா

nathan