31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா!

இன்று நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகம் கொண்டவர். 1995ல் ரம்லதா என்ற பெண்ணை மணந்தார்.

இந்த தம்பதிக்கு விஷால், ரிஷி ராகவேந்திரா தேவா மற்றும் ஆதித் தேவா என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் விஷால், 2008ல் இறந்தார். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக பிரவுதேவா தனது மனைவி ரம்லதாவை விவாகரத்து செய்தார்.

கடந்த ஆண்டு பிரபுதேவா உறவினரை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பிரபுதேவாவுக்கு முதுகு வலிக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவலை அடுத்து பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் சகோதரர் ராஜு சுந்தரம் தெரிவித்துள்ளார். இது வரையில் அவர் தனது இரண்டாவது மனைவி குறித்து வெளியிடவில்லை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபுதேவா கூறியதாவது, நான் இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்றிருப்பது உண்மைதான். 50 வயதில், நான் மீண்டும் தந்தையானேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. என் வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை அவர்தான் என்றார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரபுதேவா தனது மகள் மற்றும் மனைவியுடன் இன்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அந்த வீடியோவில், இரண்டாவது மனைவி கையில் ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

தளபதி 67 படத்தில் இணைத்த லோகேஷ்.! லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்!!

nathan

’உதயநிதி தலையை கொண்டு வந்தால் 10 கோடி பரிசு’

nathan

குமரிமுத்துவின் சடலத்திற்கு நேர்ந்த அவலம்

nathan

பிக்பாஸ் வீட்டிற்குள் குடும்பத்துடன் நுழையும் வனிதா…

nathan

இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா

nathan

இலங்கை பிடித்துள்ள இடம்! உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள்:

nathan

நடிகர் மாதவன் குடும்பத்துடன் நடிகை நயன்தாரா

nathan

தன்னை தானே வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சம்

nathan