31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

பச்சை பயிற்றில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பச்சை பயிற்றில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான பச்சை பயறு சூப்
தேவையான பொருட்கள் :

பச்சை பயறு – 1/2 கப்
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) – 1
தக்காளி (நடுத்தர அளவு) – 1
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெங்காயம் – 1
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை :

* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

* உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி, 3 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.

* குக்கர் விசில் போனவுடன், வெந்த பயறு கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

* அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.

* பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கியதும் அதில் அரைத்து பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.

* சத்தான சுவையான பச்சை பயறு சூப் ரெடி.

Related posts

உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

nathan

சுவை மிகுந்த சிக்கன் சூப்

nathan

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

முருங்கை கீரை சூப்

nathan

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

nathan

கொத்தமல்லித்தழை சூப்

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan

காலிஃளவர் சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

nathan