32.4 C
Chennai
Monday, May 12, 2025
beauty dangerous 003
கண்கள் பராமரிப்பு

வசீகரிக்கும் கண்களுக்கு

கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் அதற்கான சில ஆலோசனைகள். கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும்.

இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும். சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும்.

பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும். வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
beauty dangerous 003

Related posts

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ……..

sangika

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

nathan

அழகான புருவங்களுக்கு

nathan

உங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேற இத படிங்க!

sangika

கண்களில் உண்டாகும் சதைப்பையை தடுக்கும் ஈஸியான வழிகள்!!

nathan

கண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan