தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு – 1/4 கப்
* தக்காளி – 2 (பெரியது)
* சின்ன வெங்காயம் – 10
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* தண்ணீர் – 1 1/4 கப்
* புளி – 1 நெல்லிக்காய் அளவு
* சாம்பார் பொடி – 2-3 டீஸ்பூன்
* தண்ணீர் – 2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் – 1 அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2-3
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிழிந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு துவரம் பருப்பை நீரில் 2-3 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய துவரம் பருப்பை குக்கரில் போட்டு, அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, சின்ன வெங்காயத்தைப் போட்டு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, 1 1/4 கப் நீரை ஊற்றி கிளறி நன்கு கிளறி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 8-10 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
Tomato Sambar Recipe In Tamil
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் மீண்டும் அந்த குக்கரை பருப்புடன் அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்துவிட்டு, பருப்புடன் புளிச்சாற்றினை ஊற்றி கிளற வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, குறைவான தீயில் 10-12 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.
குறிப்பு:
* இந்த சாம்பாருடன் வேண்டுமானால் உங்களுக்கு பிடித்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* தாளிப்பதற்கு எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்தலாம்.
* துவரம் பருப்பு இல்லாவிட்டால், பாசிப்பருப்பை பயன்படுத்தியும் செய்யலாம்.
* வீட்டில் சாம்பார் தூள் இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் மல்லித் தூள், 1/4 டீஸ்பூன் சீரகத் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/4-1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.