உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாக ஊறும். பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த, 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுற்றி உள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து, 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். வாத நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.
பசலைக் கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக் கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் ரத்த அணுக்களையும் அதிகரிக்கும்.
கீரைகள், செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும். உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து இரும்புசத்தாகும். இந்த சத்து, எலும்புகளை வலுவாக்குவதுடன், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை வினியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால், ரத்த அணுக்கள் குறைந்து, அனீமியா நோய் ஏற்படுகிறது.
அதனால் இரும்புச்சத்துக்கள் நிறைந்த இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு சத்துள்ள உணவுபொருட்களை உட்கொண்ட பின்னர், அவை செரிமானம் ஆகும் வகையில் உடல் உறுப்புகளை செயல்பட செய்வதும் அவசியம்.