25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
12794415 1593250444331673 9222385263676291897 n
எடை குறைய

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க. !

பலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான் வேண்டும். இல்லாவிட்டால், அக்கொழுப்புக்களே பல நோய்கள் வர காரணமாகிவிடும்.

எனவே ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் இக்காலத்தில் தொப்பையும் பலருக்கு இருப்பதால், அதனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

இங்கு உடல் எடையையும், தொப்பையையும் வேகமாக கரைக்க இரவில் பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.

மிளகு

ஆய்வுகளிலும் உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்

உணவுகளைத் தவிர்க்கவும் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை இரவில் படுக்கும் முன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்யும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களான உடலில் தேங்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை இரவில் மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் சாப்பிடக்கூடாது.

நல்ல தூக்கம் அவசியம்

ஆம், உடல் எடையைக் குறைக்க நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். ஒருவர் சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால் தான் உடல் பருமனை அடைய நேரிடுகிறது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம் செய்தல், இனிமையான பாடல்களை கேட்டல், நல்ல வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

நைட் டைம் ஜூஸ்

இரவில் படுக்கும் முன் எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, கற்றாழை போன்ற உடல் கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களால் செய்யப்பட்ட ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வர, உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.12794415 1593250444331673 9222385263676291897 n

Related posts

நம் உடல் எடையை வேகமாக குறைக்க இதோ சில டிப்ஸ்

nathan

டாப் 10 எடை இழப்பிற்கான ஸ்மூத்தீஸ் வகைகளும் அதன் செய்முறைகளும்,,

nathan

உடல் பருமனைக் குறைக்க சாப்பிடலாம் கத்தரிக்காய்

nathan

உடல் எடையை குறைக்கும் சுக்கு சூப்

nathan

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

ஏழே நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்க இதய மருத்துவர் கூறும் ஓர் அற்புத வழி!

nathan

வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்!

nathan

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்..!!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

nathan