v
எடை குறைய

நீங்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியா?…அப்ப இத படிங்க!

நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். அவ்வாறு சேர்ப்பதானால் நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், அவை உடல் எடை குறையவிடாமல் தடுக்கும்.

பால் பொருட்களை எடையைக் குறைக்கும் சமயத்தில் எடுத்து கொண்டால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பல் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது.

சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.v

Related posts

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

nathan

ஆண்களின் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

nathan

உயிர்க்கொல்லிகளின் நுழைவுவாசல் உடல்பருமன்… தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்!

nathan

உங்களால் உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்

nathan

உடல் எடையைக் குறைக்க தேன் டயட்டை ஃபாலோ பண்ணி பாருங்களேன்!,slim beauty tips tamil

nathan

எகிறுது எடை… என்னதான் செய்வது?

nathan

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan

உடல் கொழுப்பு கரைய – முட்டைகோஸ் சூப்:!

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika