29.9 C
Chennai
Friday, May 16, 2025
2 chutney 1662126672
சட்னி வகைகள்

ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி -செய்முறை

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – சிறிது

* காஷ்மீரி மிளகாய் – 2

* கறிவேப்பிலை – 10-12

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* தக்காளி – 1 கப் (நறுக்கியது)

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* அதன் பின் காஷ்மீரி மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

Andhra Style Tomato Chutney Recipe In Tamil
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து தக்காளியை நன்கு வேக வைக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்ததும், அதை இறக்கி புளியை சேர்த்து கிளறி, குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். இப்போது ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

Related posts

சூப்பரான கோங்குரா சட்னி

nathan

கேரட் – வெந்தயக்கீரை சட்னி

nathan

வரமிளகாய் சட்னி செய்வது எப்படி

nathan

முட்டைக்கோஸ் சட்னி

nathan

சுட்ட கத்திரிக்காய் சட்னி

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

கேரளா பூண்டு சட்னி

nathan

சுவையான செலரி சட்னி

nathan