தேவையான பொருட்கள்:
மசாலா பவுடருக்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் – 5
வதக்குவதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 5 பல்
* வெண்டைக்காய் – 2 கப் (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* புளி – ஒரு சிறிய துண்டு
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மல்லி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசுபிசுப்பு போகும் வரை வதக்க வேண்டும்.
Bhindi Chutney Recipe In Tamil
* பின்பு அதில் தக்காளி, புளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் சட்னி தயார்.