hCKdN1J
சட்னி வகைகள்

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் – 250 கிராம்,
மல்லித்தழை – சிறிது,
தக்காளி – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் – 50 கிராம்,
தேங்காய்த்துருவல் – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 3,
நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயின் காம்பை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, மல்லித்தழையை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காயை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்தமிளகாய், தேங்காய்த்துருவல், தக்காளி, சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். பின் மல்லித்தழை, கறிவேப்பிலையை போட்டு வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர் ரொட்டி மற்றும் பேன் கேக்குடன் பரிமாறவும்.

குறிப்பு: புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கோவைக்காய், கோஸிலும் சட்னி செய்யலாம். பேலியோவில் கேரட், பீட்ரூட்டை அதிகம் சேர்க்கக்கூடாது.hCKdN1J

Related posts

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

nathan

தேங்காய் – பூண்டு சட்னி

nathan

இஞ்சி சட்னி

nathan

இஞ்சி தேங்காய் சட்னி

nathan

சுவையான முந்திரி சட்னி

nathan

சூப்பரான கேரட் தக்காளி சட்னி

nathan

பீட்ரூட் சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan

பாகற்காய் சட்னி

nathan