22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
okra pakoda 1621939718
சிற்றுண்டி வகைகள்

சுவையான வெண்டைக்காய் பக்கோடா

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் – 20

* கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

* அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயின் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது நீரைத் தெளித்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காயை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.

குறிப்பு:

* வெண்டைக்காயை நீளமாக வெட்டிய பின், அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து, பின் பயன்படுத்தினால், அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை குறைவாக இருக்கும்.

* வேண்டுமானால், இத்துடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

* விருப்பமுள்ளவர்கள், மிளகாய் தூளுக்கு பதிலாக பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

வீட்டிலேயே பீட்சா…!

nathan

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

பசியைத் தூண்டும் சீரக துவையல்

nathan

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

nathan

பாதுஷா செய்ய இதை படிச்ச போதும்…..

nathan