33.3 C
Chennai
Friday, May 31, 2024
03 1433314473 4besangramflourandlemonjuice
சரும பராமரிப்பு

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற

கண்ணாடியைப் பார்க்கும் போது உங்கள் முகம் பொலிவிழந்தும், சுருக்கங்களுடனும் உள்ளதா? ஒவ்வொரு முறை முகத்தைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளதா? அதனால் கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இருப்பினும் எவ்வித மாற்றமும் தெரியாது.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க. மாறாக அந்த பொருட்களில் உள்ள கெமிக்கல்களினால், சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தினமும் அழகைப் பராமரித்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சுருக்கங்கள் நீங்கி, சருமம் பொலிவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!! அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தை தொடர்ந்து 15 நாட்கள் பராமரித்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது சருமத்தின் பொலிவை அதிகரித்து, சுருக்கத்தைப் போக்க உதவும் அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

முள்ளங்கி 3 சிறிய முள்ளங்கியை நீரில் போட்டு 1/2 மணிநேரம் கொதிக்க விட்டு, பின் இறக்கி குளிர வைத்து, அந்த நீரைக் கொண்டு தினமும் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேற்றி, கரும்புள்ளிகள் நீங்கி, முகத்தின் நிறமும் அதிகரிக்கும்.

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்துக் கெள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் அந்த பொடியை சிறிது போட்டு, அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சீரகம் சீரகத்தை நீரில் போட்டு 1/2 மணிநேரம் கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குளிர வைத்து, அதைக் கொண்டு முகத்தை கழுவினால், முகத்தின் பொலிவு அதிகமாகும்.

கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவில், 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் சந்தனப் பொடி 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து, அதோடு 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறு வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்கள் நீங்கி, முகத்தின் பொலிவு அதிகமாகும்.

பாதாம் ஒரு கையளவு பாதாமை 1 கப் பாலில், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் கருமைகள் நீங்கும்.
மில்க் க்ரீம் தினமும் இரவில் படுக்கும் முன், மில்க் க்ரீமை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் நீங்கி, சருமமும் பட்டுப் போன்று இருக்கும்.
03 1433314473 4besangramflourandlemonjuice

Related posts

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

சமையலில் பயன்படும் கொத்தமல்லி, கறிவேப்பிலைக் கொண்டு எப்படி அழகை மேம்படுத்துவது?

nathan

உங்களுக்கு சிவந்த சருமம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan

காபியை அதிகமாக குடித்தால் முகப்பரு உண்டாகிறது பெண்களே……

nathan

வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்

nathan

சரும நோய்களை தீர்க்கும் கேரட்

nathan